அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி?
அண்ணா பல்கலைக்கழகதிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ஒரு திட்டம் மக்களுக்கு சாதகமா-பாதகமா என்ற அக்கறை-முன்யோசனை எதுவும் அடிமைகளுக்கு கிடையாது. கமிஷன்அடிக்க பாஜக சொல்லும் எதையும்கேட்கலாம், எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதே இவர்களின் தாரகமந்திரம். அதற்கான உதாரணமே அண்ணா பல்கலைக்கு சிறப்புஅந்தஸ்து என்ற ஏமாற்றுவேலை.
சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் பல்கலைக்கழகம் தாரை வார்க்கப்படும்-கட்டணம் உயரும்-இட ஒதுக்கீடு சிக்கலாகும் என எல்லாவற்றையும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? தலைவர் அவர்கள் சொன்னவற்றையே சொல்ல அமைச்சருக்கு இத்தனை நாள் தேவைப்பட்டதா?’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025