பிரதமர் நாட்டை விட்டு போவாரா? ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

annamalai

Annamalai: இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஆ.ராசா என்று அண்ணாமலை விமர்சனம்.

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன்பின் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உறையற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பிறக்காத தமிழன் தான் பிரதமர் மோடி. ஜனநாயகத்தை பற்றி திமுக எங்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது என திமுக மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

இதன்பின் அண்ணாமலை பேசியதாவது, இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவார்களாம், பிரதமர் மோடி நாட்டை விட்டு போவாராம் என நீலகிரி தொகுதியின் எம்பி ஆ.ராசா சொல்லியதாக தெரிவித்தார். பிரதமர் மோடி போன்ற ஒரு மனிதர் தேர்தல் முடிந்த பிறகு நாட்டை விட்டு சென்று விடுவார் என ஆ.ராசா கூறுகிறார்.

இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் உண்டு என்றால் அது ஆ.ராசா தான். எனவே, பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசா இந்த நீலகிரி தொகுதியில் டெபாசிட் கூட வாங்கக் கூடாது. கூட்டணி ஆட்சி இருக்கும்போதே ஆ.ராசா மற்றும் கனிமொழியை 2ஜி ஊழல் வழக்கில் சிறையில் அடைத்தனர்.

இதனால் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர்கள் நமக்கு நேர்மையை பற்றி பாடம் எடுக்க கூடாது. எனவே, நீலகிரி தொகுதியில் அடுத்த 7 நாட்கள் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். இந்த நாட்களில் கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமருக்காக இந்த நாட்களை அர்ப்பணிக்க வேண்டும். பிரதமர் மோடி நமக்காக அடுத்த 5 ஆண்டுகள் உழைப்பார் என்றும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்