#BREAKING: காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை.!

காணும் பொங்கல் அன்று கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை ,தற்போது உள்ள ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தொடரும்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் அதாவது 16-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025