தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!

TN CM palanisamy announced last month that only 50 per cent of seats in theaters would be allowed will continue this month.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தபடி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள முதல்வர், திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உச்சவரம்பின்றி பணி செய்ய அனுமதி வழங்குவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு முதல்வரிடம் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.