கொலம்பியாவில் 2 ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்து… ஒருவர் பலி… வெளியான வீடியோ.!

கொலம்பியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொலம்பியா நாட்டில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொலம்பியாவில் உள்ள அபியா விமான தளத்தில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 dead after Colombian Air Force planes collide in mid-air during training in Villavicencio, Colombia pic.twitter.com/k4e2eEDaWV
— BNO News (@BNONews) July 1, 2023
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் லெப்டினன்ட் கர்னல் மரியோ ஆண்ட்ரேஸ் எஸ்பினோசா கோன்சாலஸ் இறந்ததாக அந்த நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு விமானம் மற்றொரு விமானம் மீது மோதியதால் தீப்பற்றிக்கொண்டு விபத்து ஏற்பட்டதாக வீடியோவில் தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025