மகாராஷ்டிர மாநில துணை முதல் அமைச்சராக அஜித் பவார், ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றார் .
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) சில எம்.எல்.ஏ க்களுடன், சேர்ந்து அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைவதற்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
unknown nodeஇதையடுத்து மகாராஷ்டிர மாநில அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) அஜித் பவார், ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆளுநர் முன்னிலையில் இன்று பதவியேற்றார். மேலும் மற்ற என்சிபி தலைவர்களும் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர்.
