2 என்ஜின் அல்ல, 3 என்ஜினுடன் அரசு செயல்படும்… முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.!

CM DCm

மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக 3 என்ஜினுடன் நமது அரசு செயல்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் இன்று திடீர் அரசியல் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) அஜித் பவார், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆளுநர் முன்னிலையில் இன்று அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் அஜித் பவாருடன், 9 என்சிபி தலைவர்களும் ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தற்போது 1 முதல்வர் மற்றும் 2 துணை முதல்வர்கள் நமது அரசுக்காக பணியாற்ற இருக்கின்றனர்.

இதற்கு முன் இரண்டு என்ஜின்களுடன் இயங்கிவந்த நமது அரசு இனி, மூன்று என்ஜின்களாக மாறியுள்ளது. மேலும் கூறிய ஷிண்டே, மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது தலைவர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிராவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்