ஒரு கிலோ 150...மதுரையில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. பல மாவட்டங்களில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை சென்னை,

Tomato Price Madurai

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. பல மாவட்டங்களில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை சென்னை, கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது.  இதனையடுத்து, தற்போது மதுரை மாவட்டத்திலும் தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளதால் மக்கள் தக்காளி வாங்கவே யோசிக்கிறார்கள்.

மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் சில்லறை விலையில் 1 கிலோ தக்காளி ரூ.150க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.