நியூஸிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவு!

A strong earthquake shook the island of Auckland in New Zealand today. Its Richter scale is reported to be 5.8.

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து தீவு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவாகியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் சின்ன சின்ன தீவுகள் அதிகளவில் உள்ளது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில், ஆக்லாந்து தீவு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.