கஜகஸ்தான் நாட்டு ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

A bomb blast near a military base in Kazakhstan has killed at least nine people.

கஜகஸ்தான் நாட்டில் உள்ள இராணுவ தள ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டின் ஜம்லி மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கில் வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென இந்த ராணுவ தளத்தில் சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் ராணுவ தளம் முழுவதிலும் தீ பரவியுள்ளது.

இந்த தீ பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.