பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி

All adults in UK to get first dose of COVID-19 vaccine by July 31

பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பைசர் , அஸ்ட்ராஜெனெகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.2020 டிசம்பரில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது.17 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் குறைந்தது 17.2 மில்லியன் மக்கள் நாடு முழுவதும் உள்ள 1,500 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.கிட்டத்தட்ட 600,000 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.மேலும்   ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்த அனைவருக்கும், தடுப்பூசி செலுத்த புதிய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்,சுகாதாரப் பணியாளர்கள்  உட்பட முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.