உலக பணக்காரர் பட்டியலில் 11 ஆம் இடத்தில் அம்பானி.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

Mukesh Ambani of India is 11th in the list of the richest people in the world. First is Amazon founder Jeff Bezos.

உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி 11 ஆம் இடத்திழும், முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தக்கவைத்து கொண்டார்

இந்தியளவில் “முகேஷ் அம்பானி” என்ற பெயர் அறியாதவர் எவரும் இல்லை. ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தவர், முகேஷ் அம்பானி. கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள், கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், அம்பானியின் ஜியோ நிறுவனம் முன்னேறி வந்தது.

இதுகுறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர் வலைத்தளம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, 186 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க், மூன்றாம் இடத்தில் 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், நான்காம் இடத்தில் 110 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பேர்னால்டு அர்னால்ட், அவரை தொடர்ந்து, 101 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.