அமெரிக்காவில் கடந்து 24 மணி நேரத்தில் 2494 உயிரிழப்பு.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 2,979,353 பேர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் 206,240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 875, 257 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 976,403 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 54,965 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 118,693 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்து 24 மணி நேரத்தில் மட்டும் 2494 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமான நிலையில் இருப்பது குறித்து வருத்தமாக இருக்கிறது என பலர் கருத்து வெளிவருகிறது.