எக்ஸ் என பெயர் மாற்றம்; ட்விட்டர் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழப்பு என தகவல்.!

எலான் மஸ்க், ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றியவுடன் அதன் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழக்கிறது என ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.
ட்விட்டரின் நீலநிறப்பறவை சின்னமும் நீக்கப்பட்டு X என்ற எழுத்தாக மாற்றப்பட்டதன் விளைவாக, ட்விட்டரின் நிகர மதிப்பு 4 பில்லியன் டாலர் (ரூ.32,724 கோடி) மற்றும் $20 பில்லியன் (ரூ.1.63 லட்சம் கோடி) மதிப்பை இழந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறிய எலான் மஸ்க் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நோக்கி நகர திட்டமிட்டுள்ளதால், ட்விட்டர் என்ற பெயர் இருப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்துள்ளார். இந்த புதிய மாற்றத்தால் ட்விட்டர் அதன் கடந்த ஆண்டு மதிப்பை விட 32% இழந்துள்ளது என சமீபத்திய ஆய்வில் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.