தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதன் கோர தாண்டவத்தை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது.
உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,86,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 1,17,448 குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரசால் 22,020 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.