கோவக்ஸ் தடுப்பூசியை பெற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை அரசு!

The Sri Lankan cabinet will sign the second part of the World Health Organization vaccine agreement this week.

இலங்கை அமைச்சரவை இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை அரசு covax  தடுப்பூசி பெறுவதற்கான ஒப்பந்தத்தை பெற தயாராக உள்ளது.  நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி அங்கீகாரம் இதற்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இலங்கை அரசு தடுப்பூசி பெற தகுதி உடையதாக அமைந்துள்ளது.

இலங்கை அமைச்சரவை இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடும். இது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தடுப்பூசி பெற நாட்டிற்கு உதவும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடுவது ஜனவரி 8-ம் தேதிக்குள் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை தேர்வு செய்வதாக இலங்கை அரசாங்கம் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் தொடக்கத்திலிருந்து இலங்கையில் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அக்டோபர் வரை வெறும் 13 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, இப்போது 200 தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 240-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.