,

சர்வதேச தேநீர் தினம் : தேநீர் பிரியர்களே..! தேநீர் தினத்தின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா…?

By

இன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு உட்கொள்கிறார்களோ,  இல்லையோ தினமும் மூன்று வேளை தேநீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அதிலும் பலர் தேனீருக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். சாப்பாட்டிற்கு பதிலாக தேநீரை அருந்தி விட்டு வேலை செய்பவர்களும் உண்டு.

தேனீரை விரும்பி அருந்துபவர்களுக்கு, இன்று தேனீர் குறித்த வரலாறு தெரிவதில்லை. இன்றைய தினம் சர்வதேச தேனீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த முயற்சிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 2015 இல் இந்தியா முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் மே 21-ஆம் தேதியை  சர்வதேச தேனீர் தினமாக நியமித்தது. இதற்கு முன்னதாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, உகாண்டா ஆகிய நாடுகளில் டிசம்பர் 15 சர்வதேசதேநீர் தினமாக கொண்டாடினர்.

2007 ஆம் ஆண்டு இந்திய தேயிலை வாரியம் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையில் சுமார் 80 சதவீதத்தை உள்நாட்டு மக்களே பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தேனீரை பொருத்தவரையில் பலருக்கு அதுதான் சுறுசுறுப்பு பானம் என்று கூட சொல்லலாம். நாம் குளிர்ச்சியாக இருந்தால் அந்த தேனீர் நம்மை சூடாக மாற்றும். நீங்கள் சூடாக இருந்தால் அது உங்களை குளிர்விக்கும். அதேசமயம் நீங்கள் மன சோர்வாக இருந்தால் அது உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் உற்சாகமாக இருந்தால் அது உங்களை அமைதிப்படுத்தும். நாம் எந்த சூழலில் இருந்தாலும் நமது இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கு ஒரு கப் தேனீர் போதுமானது. தேநீரில் காஷ்மீரி கஹ்வா, இஞ்சி டீ, துளசி டீ, சுலைமானி டீ, ரோங்கா டீ, மசாலா டீ, லெமன்கிராஸ் டீ, கிரீன் டீ போன்ற பலவகையான தெணர்றே உள்ளன.

Dinasuvadu Media @2023