ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் காலமானார் ....!

Iran's 88 - year - old first president Apollos Hassan Banerjee has died today due to ill health.

88 வயதுடைய ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.

1933 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி பிறந்தவர் தான் அபோல்ஹாசன் பனிசாத்ர். இவர் தான் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர். இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.

இவர் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலம் தென்கிழக்கு பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 88 வயதுடைய அபோல்ஹாசன் பனிசாத்ர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலமானார்.