துணை ஜனாதிபாதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் கொரோன தடுப்பூசி போட்டுக் கொண்டார்!

Kamala Harris, the Vice President-elect of the United States, is currently being vaccinated against corona.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இவருக்கு போடப்பட்ட தடுப்பூசி மாடர்னா தடுப்பூசி ஆகும். வாஷிங்டனில் உள்ள யுனிடெக் மெடிக்கல் சென்டரில் முதல் டோஸை போட்டுக்கொண்டார். அதுபோல கமலாவின் கணவரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.