1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக பதவி வகித்த கமலா ஹாரிஸ்!

Kamala Harris has served as US President for 1.25 hours after being given anesthesia by US President Joe Biden.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், 1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் சிகிச்சை பெறும் வரை தனது அதிபர் அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சிகிச்சை பெறும் வரை ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிகமாக கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். பரிசோதனை முடிந்த பின் ஜோ பைடன் அவர்கள் மீண்டும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கியுள்ளார். ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்தாலும் அமெரிக்காவில் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் பெற்றுள்ளார்.