kuwait fire [file image]
குவைத் : நாட்டின் தெற்கு அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காப் பகுதியில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சமையல் அறையில் நேற்று (ஜூன் 12) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பலரும் உயிரிழந்தவர்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் “குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார். அலுவலகத்தில் கூட்டம் ஒன்றை நடத்தி இந்த தீ விபத்தில் பலியான இந்தியர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…