பிரேசிலில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நபர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரேசிலை சேர்ந்த டியாகோ ரபேலோ மற்றும் விட்டர் பியூனோ இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின் 2020, செப்டம்பர் மாதம் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஜூலை மாதம் பிரிந்தனர்.
இதனையடுத்து, மணமகனின் குடும்பத்தினர், இருவரும் பிரிந்ததால், திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனக் கூறினர். இதற்கு டியாகோ மறுப்பு தெரிவித்தார். மணமகளே இல்லை என்றாலும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என அவர் உறுதியாக இருந்தார்.
இதனையடுத்து, குறித்த தேதியில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், டியாகோ தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘என்னுடைய வாழ்ககையில் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த நபர்களுடன் எனது நேரத்தை செலவழித்தேன். மிகவும் சோகமான இந்த நாளை நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றி உள்ளேன். என்னை நானே அதிகம் காதலிப்பது அவசியம் என தெரிந்து கொண்டேன்.’ என பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…