தோசையின் பெயரை ‘நேக்கட் க்ரீப்’ என்று மாற்றி ரூ1400 க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடைக்கு அதன் ஒரிஜினல் பெயர்களை மாற்றி ஆங்கிலத்தில் புதிய பெயர் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தியன் கிரீப் கம்பெனி என்ற அந்த ஹோட்டலானது அமெரிக்காவின் ரெட்மாண்ட் நகரில் உள்ளது. இது மிகவும் பிரபலமான இந்திய ஹோட்டல். இந்த ஹோட்டலில்தான் தற்போது இந்திய உணவு வகைகளின் பெயர்களை மாற்றி வைத்துள்ளனர்.
இட்லிக்கு Dunked Rice Cake Delight என்று பெயர்வைத்துள்ளனர். மேலும் தோசையைக்கு ‘Naked Crepe’ , மசால் தோசைக்கு ‘Smashed Potato Crepe’ , சாம்பார் வடைக்கு ‘Dunked Doughnut Delight’ என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், ஒரு தோசையின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 1400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
unknown node