அமெரிக்கா, ரஷியா,சீன,கனடா உள்பட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு வெளியே சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதில் அதிக நாட்கள் தங்கி சாதனை புரிந்த பெண் பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார். இந்த வின்வெளி ஆய்வு மையத்தில் ஆறு வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 3 பேர் ஆறு மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த […]
சோமாலியா நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் , 90 பேர் படுகாயம் அடைந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சோமாலிய நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் இன்று காலை நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். படுகாயம் அடைந்தவர்களில் பலரின் […]
ஐநா சபை உலகில் பிரபலம் வாய்ந்த பாகிஸ்தான் இளம்பெண்ணை தேர்வு செய்துள்ளது. மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐநா சபை உலகில் பிரபல வாய்ந்த நிகழ்வுகள், பிரபலம் வாய்ந்த நபர்களை தேர்தெடுத்து அறிவுப்பு வெளியிடும். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா […]
கடலுக்குள் விழுந்து சுறாவிடம் மாட்டிக்கொண்ட நபர்.உயிர்தப்பிய சம்பவம். அமெரிக்கா கடலோர படை வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையோரத்தில் கடந்த சனிக்கிழமை பெரிய வெள்ளை சுறாவால் கடிபட்ட ஆதம் கூன்ஸ் என்ற நபரை அமெரிக்க கடலோர காவல்படை காப்பாற்றியுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட நபரான ஆதம் கூன்ஸ் இந்நிகழ்வினை கிறிஸ்மஸ் மிராக்கிள் என்றே குறிப்பிடுகிறார்.அமெரிக்க கடலோர காவல்படை மதியம் 3.15 மணியளவில் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த நபரை சுறாமீன் கடித்ததாக கூறியுள்ளனர். பின்னர் இது குறித்து […]
நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீவ் என்ற 10 வயது சிறுவன் டி-சர்ட்டில் பாம்பு இருப்பது போன்ற புகைப்படம் கொண்ட டி-சர்ட் அணிந்து சென்றதால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பின்னர் டி-சர்ட்டை உள்பக்கமாக அணிந்த பிறகு விமானத்தில் ஏற அனுமதித்து உள்ளனர். நியூசிலாந்தை சேர்ந்தவர் லூகாஸ். இவரது மகன் ஸ்டீவ் வயது(10) ஆகிறது. இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது பாட்டியை பார்க்க தனது தாயுடன் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது ஸ்டீவை விமானத்தில் ஏற அனுமதிக்கமுடியாது என […]
பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி பான்போன் புயல் 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன் வீசியது. பான்போன் புயலால் 20 பேர் பலியாகியிருப்பதாக பேரிடர் மைய அதிகாரி தகவல் தெரிவித்தனர். பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராக இருந்த நிலையில் அந்நாட்டில் பான்போன் புயல் திடீரென தாக்கியது. இந்த புயல் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன் வீசியது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து […]
கஜகஸ்தானில் விமான நிலையம் அருகே2 மாடி கட்டிடத்தில் விமானம் மோதி கோர விபத்து 15 பேர் பலி 66 பேர் காயம் என்று தகவல் வெளியாகியுள்ளது கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து அந்நாட்டின் தலைநகர் நுர்சுல்தன் நகரை நோக்கி பயணிகள் விமானம் ஆனது புறப்பட்டது. தலைநகரை நோக்கி சென்ற இந்த விமானத்தில் 95 பயணிகள் மற்றும் 5 விமான பணிபெண்கள் என்று மொத்தம் 100 பேர் பயணிக்க தயாரகி இருந்தனர். சரியாக விமானம் புறப்பட்ட […]
நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில் தான் நடந்துள்ளது இந்த வினோதமான கொள்ளை முயற்சி. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், ஏடிஎம் அறைக்குள் ஒரு நபர் நுழைகிறார். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும் வேளையில் கதவு தானாக சாத்திக் கொள்கிறது. இதையடுத்து அங்கு உள்ள எச்சரிக்கை மணி சப்தமாக ஒலிக்கிறது. இதனால் பதட்டம் அடையும் அந்த நபர் கீழே இருக்கும் ஒரு தகரத்தை எடுத்து கதவை உடைக்க முயற்சி செய்கிறார். […]
கஜகஸ்தானின் உள்ள அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 95 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் பெக் ஏர் ஜெட் விமானம் நூர்-சுல்தானுக்குச் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில் இதுவரை 7 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் ,டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென்னை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அரி பென் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2002-ம் ஆண்டு நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் ,டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் […]
குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர். குழந்தைகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஆள்னே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.அப்போது சுமார் 35 வயதுள்ள பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளார். இதனால் அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அப்போது […]
பூங்காவிற்குள் சிறுவனை தாக்க முயன்ற புலி,கண்ணாடி இருந்ததால் உயிர் தப்பிய சிறுவன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் டப்ளின் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது.அந்த பூங்காவிற்கு கடந்த 22ந்தேதி தனது பெற்றோருடன் சிறுவன் ஒருவன் சுற்றுலா பயணமாக சென்றுள்ளான். அங்கிருந்த விலங்குகளை ரசித்து கொண்டு ஓரத்தில் நின்று நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் புலி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. ஆனால் அந்த சிறுவன் அதை கவனிக்கவில்லை. […]
பார்சிலோனாவில் பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக அப்படியே இருக்கிறார். செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பார்சிலோனாவில் பாப் பாடல் மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாலும், முகத்தில் பல […]
அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த டேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர். அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார். அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை […]
வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை மற்றும் ஸ்பானிஷ் போன்ற படங்களை கற்பித்து வருகிறார். மாணவர்களுக்கு இவர் […]
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ குளியலறையில் வழுக்கி கீழே விழுந்து அவரது பழைய நினைவுகளை இழந்து, தற்போது சிகிச்சைக்கு பின் நலமாக இருக்கிறார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட இவருக்கு 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஆல்வொராடா மாளிகையில் குளியலறைக்கு சென்ற போது அவர் திடீரென அங்கு வழுக்கி கீழே விழுந்து அவரது தலை, தரையில் […]
அமெரிக்காவில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. அமெரிக்காவில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், அந்த வழியாக செல்லும் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின விபத்து ஏற்பட்டது. இப்படி […]
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 வயது சிறுமிக்கு சர்ப்ரைஸ் என்ற வாழைப்பழத்தை கொடுத்துள்ளார். ஆனால் சர்ப்ரைஸ் கொடுத்த தாய்க்கு மகள் சர்ப்ரைஸ் கொடுத்தது தான் சுவாரிஸ்யம். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 வயது சிறுமிக்கு சர்ப்ரைஸ் என்ற வகையில் அவரது தாய் பரிசு ஒன்று சிறுமிக்கு வழங்கினார். அம்மா ஏதோ பரிசு கொடுத்திருக்கிறாரே என்று ஆவலாகக் குழந்தை திறந்து பார்க்கிறது. பின்னர் பார்த்ததும் கியூட்டாக பனானா பனானா என […]
ரஷ்யாவில் ஒருவர் தன் மெர்சிடிஸ் எஸ்.யூ.வி AMG G63 மாடல் காரை ஹெலிகாப்டர் வைத்து தூக்கிக் கீழே போட்டு நொறுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உள்ளூர் செய்திகளில், இகோர் மொராஸ் தனது நண்பர் ஒருவருடன் போட்ட ஒப்பந்தத்திற்காகவே காரை நொறுக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் இகோர் மொராஸ் என்பவர் ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் எஸ்.யூ.வி AMG G63 மாடல் காரை அவர் ஓட்டும் போது தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் […]