இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் பிரச்சினையில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தனக்கு மென்மேலும் அழுத்தம் தருவதாக வடகொரியா கருதுகிறது.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென வட கொரியா, டிரம்புடனான […]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். 36 வயதாகும் […]
ஹவாய் தீவில் kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் வெளியேறலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. […]
துறைமுக அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் பதவி அதிகாரத்துடன் போலீசாரை மிரட்டிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியின் துறைமுக ஆணையரான கேரன் டர்னர் (Caren turner) உடைய மகளின் கார் போக்குவரத்து விதி மீறலுக்காக நிறுத்தப்பட்டது. அனுமதிக்கப்படாத கண்ணாடியின் அடர் நிறத்துக்காக நிறுத்தப்பட்ட காரின் பதிவு உரிமம் முடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த டர்னர் தமது அடையாள அட்டையைக் காண்பித்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை சபிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து […]