இந்தியா – அமெரிக்காவுடனான நட்புறவு.. உலகில் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்று.! அதிபர் ஜோ பைடன் புகழாரம்.!

இந்தியா – அமெரிக்காவுடனான நட்புறவு உலகில் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்று என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி முதல் அமரிக்கா மற்றும் எகிப்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இதில் அமெரிகாவில், நியூயார்க் நகரில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை அடுத்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு, விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி வருகையை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்தியா – அமெரிக்கா உடனான நட்புறவு உலகில் மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய நிகழ்வுக்குகளில் ஒன்றாகும். மேலும், இந்த சந்திப்பு முன்னெப்போதையும் விட வலுவானது நெருக்கமானது மற்றும் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. என ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு உலக நன்மைக்கான ஓர் சக்தியாகும் என குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருந்தார்.