ஓடும் ரயிலில் கத்திக்குத்து..! 2 பேர் உயிரிழப்பு..!

வடக்கு ஜெர்மனியில் கீல்-ஹம்பர்க் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஜெர்மனியில் கீல்-ஹம்பர்க் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஜெர்மனியில் ஹம்பர்க் செல்லும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரயிலில் பயணித்த பயணிகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். ரயிலானது கீலில் இருந்து ஹம்பர்க் நோக்கி பயணித்து கொண்டிருந்தது. ரயில், ப்ராக்ஸ்டெட் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயணிகளை கத்தியால் தாக்கியுள்ளார்.

unknown node

German train knife attack [Image Source : AP]

ரயிலில் இருந்த பயணிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால் ரயிலை நிறுத்தி தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ப்ராக்ஸ்டெட் ரயில் நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டது. இதனால் வடக்கு ஜெர்மனி முழுவதும் ரயில் போக்குவரத்து தாமதமானது.