சுனிதா இல்லாமல் நள்ளிரவில் பூமி திரும்பும் ஸ்டார்லைனர் விண்கலம்.!

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன், ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்புகிறது.

Boeing Starliner

மெக்சிகோ : விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோரின் சோதனைப் பயணம், புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்தில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜூன் 5ஆம் தேதி ஏவப்பட்டது.

ஆரம்பத்தில் 8 நாள் பயணமாக திட்டமிடப்பட்ட இந்த பயணம் ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவது சிக்கலானது.

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, நாசாவின் SpaceX Crew-9 பணியின் ஒரு பகுதியாக SpaceX இன் டிராகன் விண்கலத்தில் பிப்ரவரி 2025 இல் பூமிக்குத் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

தற்பொழுது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற அந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலன், ஆளே இல்லாமல் இன்று  நள்ளிரவு பூமிக்கு திரும்புகிறது. ஆம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அதிகாலை 3.30க்கு பூமி திரும்பவுள்ளது.

இது நாளை இந்திய நேரப்படி, (சனிக்கிழமை) அதிகாலை 3.30 IST மணிக்கு பூமிக்கு வருகிறது. மேலும் ஆறு மணி நேரம் கழித்து நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் ஸ்பேஸ் துறைமுகத்தில் தரையிறங்கும். இதனை, NASA YouTube வீடியோ மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலிருந்து Starliner விண்கலம் புறப்படுவதை நேரலையில் பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5
Pushpa 2 Twitter Review