Elon Musk and LindaYaccarino [Image source : file image ]
உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து யாரும் எதிர்பார்த்திராத ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் புதிய தலைமை டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரி (CEO) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்னும் 6 வாரத்தில் பணியை தொடர்வார் எனவும் , அவர் டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை அதிகாரியாக தொடர்வார் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டிவிட்டரில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதை எலான் மஸ்க் விளக்கியபோது, டிவிட்டரின் புதிய CEO-ஆக பொறுப்பேற்ற லிண்டா யாக்காரினோ “உங்கள் ட்வீட்களுக்கு இது பொருந்துமா” என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “எலான் மஸ்க் காலை 3:00 மணிக்குப் பிறகு ட்வீட் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கலகலப்பாக பேசியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், லிண்டா யாக்காரினோ கூறியதற்கு மஸ்க் “அதிகாலை 3:00 மணிக்குப் பிறகு குறைவாக ட்வீட் செய்ய விரும்புகிறேன்” என்று பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…