பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் கன்னத்தில் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் நாட்டு அதிபர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் மீது பல போராட்டங்களை அந்நாட்டுமக்கள் நடத்தி வருகின்றனர். அவர் கொண்டுவந்த சட்டங்களுக்காக நாட்டு மக்கள் அவரை எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் நேற்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் ஆலோசனைக் கேட்க வரிசையாக நின்றிருந்த மக்களிடம் சென்றார். அப்போது ஒருவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரூனை அருகில் அழைத்துள்ளார். அவரும் ஆலோசனை கூற தான் அழைக்கிறார் என்று அருகில் சென்றுள்ளார். அப்போது, ‘அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு, கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்’.
உடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அறைந்த நபரை பிடித்து கைது செய்தனர். இமானுவேல் மேக்ரூனும் பாதுகாவலர்கள் அருகில் சென்று கொண்டார். இதன் பின்னர் மேலும் ஒருவர் கூட்டத்தில் இம்மானுவேல் மேக்ரூனின் கொள்கைகள் ஒழிக என்று கத்தியிருக்கிறார்.
பாதுகாவலர்கள் அறைந்த நபரையும், அதிபருக்கு எதிராக முழக்கமிட்டவரையும் கைது செய்தனர். இது திட்டமிட்ட செயல் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், ஒரு நாட்டின் அதிபர் கன்னத்தில் அனைவர் முன்னிலையிலும் அரை வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
unknown node