அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி தெரிவித்துள்ளார்.

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள் மோதிக்கொண்டது இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மோதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களை (ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான்) குண்டுவீசி தாக்கின. டிரம்ப், இந்தத் தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழித்துவிட்டதாகக் கூறினார்.

ஆனால் அமெரிக்க உளவுத்துறை, அந்தத் தளங்கள் முழுமையாக அழியவில்லை, சில மாதங்களுக்கு மட்டுமே தாமதமாகியிருக்கலாம் என்று தெரிவித்தது. இதற்கு பதிலாக, ஈரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது இன்னும் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு, இஸ்ரேல் vs ஈரானில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனவே, இப்போது போர் நிறுத்தம் நீடித்து வருகிறது, ஆனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான பகை முற்றிலும் முடியவில்லை. டிரம்பின் முயற்சி இந்த மோதலை தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், இந்த அமைதி நீண்டகாலம் நீடிக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பதற்றம் முழுவதும் குறையாமல் இருக்கிறது

இப்படியான சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேய், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றதாகக் கூறி, “ஈரான் அமெரிக்காவின் முகத்தில் கைவீசி அறைந்தது” என்று ஜூன் 26, 2025 அன்று அறிவித்தார். 12 நாள் இஸ்ரேல்-ஈரான் போருக்கு பிறகு, ஜூன் 19, 2025 முதல் பதுங்கு கிடங்கில் இருந்த அவர், போர் நிறுத்தத்திற்கு பின்னர் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் பேசினார்.

அவர் கூறுகையில், அமெரிக்கா இஸ்ரேலை “முழு அழிவில்” இருந்து காப்பாற்ற முயன்றது, ஆனால் எந்தப் பயனும் இல்லை. ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உதைத் விமானத் தளத்தை ஏவுகணைகளால் தாக்கியதாகவும், இது அமெரிக்காவுக்கு பெரிய அடி என்றும் கூறினார். ஆனால், இந்தத் தாக்குதல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

காமனேய், ஈரானின் அணு வசதிகள் பாதிக்கப்படவில்லை என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பை ஊடுருவி முக்கிய இலக்குகளைத் தாக்கியதாகவும் கூறினார். “ஈரான் ஒருபோதும் சரணடையாது” என்று அவர் உறுதிபட தெரிவித்தார், மேலும் எதிர்காலத்தில் அமெரிக்க தளங்களை மீண்டும் தாக்க முடியும் என்று எச்சரித்தார். எனவே, மீண்டும் அங்கு பதற்றம் அதிகமாகியுள்ளது. இவருக்கு பதில் அளிக்கும் விதமாக டிரம்பும் எதாவது பேசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்