இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!
கடந்த வாரம் ஜெலன்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துக்ள்ளது.

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழலில் நிலவி வரும் நிலையில், போர் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதில் அதிகமாக தீவிரம் காட்டிகொண்டு அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
எனவே, போர் நிறுத்தம் செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்ப் இருவரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தற்போது உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்தியுள்ளது. அமெரிக்க எடுத்த இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இடையேயான சமீபத்திய மோதல் தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கு வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில், டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஜெலன்ஸ்கி சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து கூட போடாமல் சென்றார்.
அதன்பிறகு அமெரிக்கா எங்களுக்கு கொடுத்த ஆதரவு மற்றும் நன்றியை என்று மறக்கமாட்டோம் எனவும் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியீட்டு தனது நன்றியை தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கி வந்த அனைத்து ராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார். இந்த முடிவு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், டிரம்ப் இப்படி திடீர் அறிவிப்பை வெளியிட்டாலும் கூட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ‛‛ நிச்சயமாக எங்களை அமெரிக்கா எப்போதும் கைவிடாது என்று நினைக்கிறேன். அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகள் அளிப்பார்கள் என நினைக்கிறேன்” என்றும் நம்பிக்கையாக பேசியுள்ளார்.