38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் கொண்ட 'உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்' தலைவர் மரணம்...!

Ziona Chana of Mizoram, the head of the world's largest family, passed away yesterday

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும்,மிசோரத்தை சேர்ந்த ‘சியோனா சானா’, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலமானார்.

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் மிசோரத்தை சேர்ந்த சியோனா சனாவுக்கு 38 மனைவிகளும் 89 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில்,சியோனா சானா,நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.சியோனா சனாவுக்கு 76 வயது ஆகிறது.

அவரது மறைவிற்கு மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும்,இதுதொடர்பாக,மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகளுடன் உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்குவதாக நம்பப்படும் திரு. சியோனா விடைபெற்றார்.அவரது பெரிய குடும்பத்தின் காரணமாக மிசோரம் மற்றும் அவரது கிராமம் பக்தாங் தலாங்னுவம் மாநிலத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக மாறியுள்ளது.எனவே,உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும் ஐயா”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node