அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை – சசிகலா

Sasikala's statement that the actions of Annamalai will harm the BJP in Tamil Nadu

Hero Image

அண்ணாமலையின் செயல்களால் தமிழகத்தில் பாஜகவுக்கு தான் கெடுதல் என சசிகலா அறிக்கை

நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை  அவர்கள், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.

அதிமுக தரப்பில் இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், சசிகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்; எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரின் சாதனைகளை முறியடிக்க முடியாது.

அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை பேச்சுக்கெல்லாம் பதில் அளிக்க தேவையில்லைஅரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலைக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை; அண்ணாமலையின் செயல்களால் தமிழகத்தில் பாஜகவுக்கு தான் கெடுதல் என தெரிவித்துள்ளார்.

unknown node