மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் (68) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொடியேறி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அஞ்சலி செலுத்திய பின் டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சிபிஐ(எம்) பொலிட் பீரோ உறுப்பினரும், 3 முறை கேரள மாநில செயலாளருமான திரு கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இறுதி மரியாதை செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தோழர். கொடியேரி ஒரு கட்டுக்கடங்காத ஆளுமை மற்றும் 1975 இல் அவசரநிலையின் போது MISA இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினருக்கும், சிபிஐ(எம்) தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Paid my last respects to @cpimspeak Polit Bureau Member and 3 time Kerala State Secy Thiru. Kodiyeri Balakrishnan.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2022
Com. Kodiyeri was an unyielding personality and was even jailed under MISA during the Emergency in 1975.
My heartfelt condolences to his family & CPI(M) comrades. pic.twitter.com/zFn2ZJ6ulJ