மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப்படுகொலைகள் நடக்கிறது. தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்-திமுக தான்.இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எட்டு வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல மத்திய அரசின் திட்டம்.8 வழிச்சாலை திட்டத்தால் […]
ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் பெற்றோர் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று மத்திய கால்நடை துறை அமைச்சர் ஆச்சார்யா கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆச்சார்யா கிரிராஜ் சிங். மத்திய அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஓன்று தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் 1947 க்கும் 2019 […]
தமிழகத்தில் திராவிட இயக்க முன்னோடியான பெரியார் அவர்களின் பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் புதிய அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி , ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கும் வேளையில் அதை எப்படி தனியாரிடம் ஒப்படைக்க இந்த அரசு முன் வந்தது என்று வினவியுள்ளார். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கூடுவாஞ்சேரி […]
உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நேற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது . இந்திய அணி வீரர்களான ஜடேஜாவும், தோனியும் கடைசி வரை போராடியும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் இது குறித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அணியில் என்னை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எனக்கு சான்ஸ் கொடுக்கவில்லை. […]
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் […]
23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் மாநிலங்களவைக்கான […]
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனால் வேட்புமனு தாக்கல் நடைபெற்று பரிசீலனை நடைபெற்றது. அதில் தேசத்துரோக வழக்கின் தண்டனை காரணமாக மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?இல்லையா ?என்ற கேள்வி வெகுவாக இருந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3-வது […]
கர்நாடக சட்டமன்ற அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. இதுவரை கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்துள்ளனர். மேலும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக கொடுத்த வாக்கை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி கூறுகையில், ‘ கர்நாடகா சபாநாயகர் இந்த ராஜினாமாக்கள் குறித்த இன்றே […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி அங்கு வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.திமுக வெளியிட்ட அறிவிப்பில், வரும் 15ஆம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 5 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறும் . வேலூர் மக்களவை […]
மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தற்போதைய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறாதது ஏன்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார் . 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அரசால் கணிக்க முடியவில்லை. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை .2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.அரசில் ஸ்திரத்தன்மை அற்ற சூழல் […]
கர்நாடக எம்எல்ஏக்கள் 10பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் (11) மற்றும் மஜத (3) எம்.எல்.ஏ.க்கள் செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால் கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில்,5 பேரின் ராஜினாமா கடிதத்தை […]
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் வேலூர் மக்களவையில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைககளை மீறியதாக கூறி வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5இல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் கூட்ட்டணி கட்சியான புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் தான் போட்டிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது,. தற்போது அவர் […]
கர்நாடக அரசியலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மீதமுள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இந்த நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்எல்ஏக்களுக்கு 17ம் தேதி வரை […]
பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தொடர்பாக விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்கள் குறித்து குடியரசு தலைவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை .நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். மருத்துவ படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கண்கொத்திப் பாம்பாக நடைபெற்று வருகிறது. இருப்பிடச் சான்றிதழ் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.மருத்துவ சேர்க்கையின் போது போலி சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.
பேரவையில் அமைச்சர் சரோஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,இறப்பின் விளிம்பில் இருந்து 1,062 ஆண் குழந்தைகள், 4,177 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் . முதியோர்களின் உணவு மானியம் ரூ.300-லிருந்து, ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பாண்டில் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. மனநலம் பாதிக்கப்பட்ட 1,100 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் துவங்கப்படும்.திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கென ரூ.1 கோடியில் புதிய […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி அவர்களின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. அதற்காக , ட்விட்டரில் அவரை பாலோவ் செய்யும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திருந்த போதிலும் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இருப்பினும், பிரதமர் மோடி அவர்களை ட்விட்டரில் பி தொடர்பவர்களை விட இந்த எண்ணிக்கை என்பது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின், கணக்கில் அவரை 4.5 […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 1553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆண் வாக்காளர்கள் – 6,98,644, பெண் வாக்காளர்கள் – 7,28,245, மூன்றாம் பாலினத்தவர்கள் […]
தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்,வருடந்தோரும் தகவல் தொழில்நுடப வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும். அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி உருவாக்கப்படும்.இதற்காக ரூ.50 லட்சம் செலவில் புதிய வலைதளம் ஏற்படுத்தப்படும்.ஒரே இணைய முகவரியை நினைவில் கொண்டு அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம்.தமிழக அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒற்றை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் […]
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரை கொறடாவாக காங்கிரஸ் குழு தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட காங்கிரஸ் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிகளில் இரண்டாம் இடத்தை கங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடாவாக மாணிக்கம் தாகூர் எம்.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் கடந்த […]
கார்ப்பரேட் நிறுவங்களிடமிருந்து நன்கொடை பெற்றதில் இந்தியாவிலுள்ள 7 தேசியக் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த நன்கொடைகளில் 94 சதவிகிதம் இடத்தை பாஜக பெற்றுள்ளது. ஏடீஆர் என்னும் தனியார் அமைப்பு அரசியல் கட்சிகள் பெரும் நன்கொடை குறித்து தகவல்களை சேகரித்து வருகிறது. அந்த அறிக்கையின் படி, 2016 முதல் 2018 ம் ஆண்டு வரை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக 985.18 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.அதில் பாஜக மட்டும் 1731 நிறுவங்களிடமிருந்து 915.596 […]