அரசியல்

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.நாகராஜ் மற்றும் சுதாகர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும்   மதச்சார்பற்ற ஜனதா தள  3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

#Congress 1 Min Read
Default Image

கடந்த 6 வருடத்தில் 1,621 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கிய பாஜக!

கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளில் இருந்து 93 சதவீதம் நன்கொடையை  தற்போது மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி பெற்று உள்ளது என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, Association for Democratic Reforms என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு மொத்தமாக 1,059 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த 1,059 கோடி ரூபாய் நன்கொடையில் மத்தியில் ஆளும் […]

#BJP 3 Min Read
Default Image

வளர்ச்சிக்கான பட்ஜெட்! மகத்தான பட்ஜெட்! என புகழ்ந்து DEMOCRACY-க்கு புதிய அர்த்தம் கூறிய ஓபிஎஸ் மகன்!

தமிழ்நாட்டில், பாஜக – அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் தான். இவர் அண்மையில் வெளியான மத்திய பட்ஜெட்டை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகையில் DEMOCRACY என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறி புகழ்ந்துள்ளார். அதன்படி, D – Development Budget ( வளர்ச்சிக்கான பட்ஜெட் ), E – Enormous Budget (மகத்தான பட்ஜெட் ), M – Modernization Budget ( […]

#ADMK 2 Min Read
Default Image

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில்,  “5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.சேதமடைந்த சாலைகள், பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்.புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும்”.. இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்! மத்திய சமூக நீதி துறை அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், இந்தியாவில் 1993 முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணிகளின் போது விஷவாயு தாக்கி, மற்ற விபத்துகளின் மூலமாகவும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். ‘ அதில் வருத்தப்படகூடிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக 3 வருடத்தில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக குஜராத்தில் […]

#ADMK 4 Min Read
Default Image

ராஜினமா செய்ய தயார்! மு.க. ஸ்டாலினிடம் அதிமுக அமைச்சர் உறுதி!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார். இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் […]

#ADMK 3 Min Read
Default Image

நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி வீட்டில் நண்டுகளை விட்டு போராட்டம் !

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.ரத்னகிரி மாவட்டத்தின் சிப் லூன் தாலுகாவில் உள்ள திவாரே ஆணை நீர் நிரம்பி கடந்த 2-ம் தேதி அணையில் ஒரு பகுதி உடைந்தது.அணையை ஒட்டி இருந்த பல கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் கிராமங்களில் புகுந்ததில் 12 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.28 பேர் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.அதில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி கூறுகையில் […]

#Politics 3 Min Read
Default Image

6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி   தேர்வாகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல்  நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் தேசத்துரோக வழக்கின்  தண்டனை காரணமாக  மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?இல்லையா ?என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என் .ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.பின் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் […]

#ADMK 3 Min Read
Default Image

சென்னை – கரூர் – திருச்சி என அடுத்தடுத்து போலீஸ் காவலில் முகிலன்!

பிப்ரவரி மாதம் சென்னையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன், அண்மையில் திருப்பதியில் கண்டுபிடிக்கபட்டார். பிறகு இவர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்க பட்டார், பிறகு அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு இவர் மீது கரூரில் ஓர் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, ஜூலை 24வரை நீதிமன்ற காவலில் வைக்க […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING : வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்  திமுகவின் என்.ஆர் இளங்கோ

மாநிலங்களவை தேர்தலுக்காக  தாக்கல் செய்த  வேட்புமனுவை வாபஸ் பெற்றார்  திமுகவின் என்.ஆர் இளங்கோ தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை […]

#DMK 3 Min Read
Default Image

#Breaking: ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ்-மஜத  எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத  எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால்  கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில், ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை என்றும்  எம்எல்ஏக்கள் என்னை வந்து சந்திக்க நேரம் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்தார். ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ்-மஜத  எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் .அதாவது சபாநாயகரின் […]

#Politics 2 Min Read
Default Image

மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது-ப.சிதம்பரம்

தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் போது 1993ம் ஆண்டு முதல் 15 மாநிலங்களில் மொத்தம் 620 பேர் உயிரிழந்துள்ளதாக சபாயி கர்மசாரி அந்தோலன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது .தமிழகத்தில் மட்டும்  144  பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144 ஆகும். மனித கழிவுகளை அகற்றும் […]

#Congress 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதனால் வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில்  வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், காந்தி, முத்துசெல்வி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#DMK 2 Min Read
Default Image

நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்-ஸ்டாலின்

ஜெயலலிதா பெயரை  ஸ்டாலின் அடிக்கடி சொல்கிறார் .அதனை சபாநாயகர் நிறுத்த வேண்டும் என்று  சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.அதில்,  நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்.தவிர்க்க முடியாத சில தருணங்களில் தான் பெயரை குறிப்பிட்டிருக்கிறேன், அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்களும், கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவையில் அது பதிவாகி இருக்கிறது. இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கூறுவது சரியல்ல என்று பதில் அளித்தார்.

#DMK 2 Min Read
Default Image

மத்திய பட்ஜெட் வரவேற்கும் வகையில் இல்லை-ஆ.ராசா

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.இதில் திமுக எம்.பி ஆ.ராசா பேசினார்.அவரது உரையில், நிதிநிலை அறிக்கையில், அரசின் இலக்கு என்ன, அதனை அடைய வேண்டிய வழிமுறைகள், போதுமான நிதி ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை. மத்திய பட்ஜெட் வரவேற்கும் வகையில் இல்லை .ரூ.400 கோடி பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.5.5 லட்சம் கோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது . பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு எந்தவித திட்டமும் இல்லை என்று தனது உரையில் தெரிவித்தார்.

#DMK 2 Min Read
Default Image

மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான்-வைகோ பேட்டி

கடந்த வாரம்  வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு  நிறுத்தி வைக்கப்பட்டது . வைகோவின்  வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற  நிலையில் இருந்தது. பின் பரிசீலனையில் வைகோவின்  வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்பு மனு ஏற்புக்கு பிறகு வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான்தான் .மத்திய […]

#DMK 3 Min Read
Default Image

பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி

நேற்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. வளாகத்தில் ரூ 3.5 கோடியில், 12 ஆசிரியர் குடியிருப்புகள் கட்டப்படும்.12,524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ 64.35 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் .நாகை ஆற்காட்டுத்துறையில் ரூ 150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடலரிப்பை தடுக்க ரூ 30 கோடியில் தடுப்புச்சுவர் […]

#ADMK 2 Min Read
Default Image

வலுவான ஆதாரம் என்னிடம் இருப்பதாலே வழக்கு தொடர்ந்தேன் – தமிழிசை பேச்சு!

கனிமொழி முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார், அவர் முறைகேடு செய்ததற்கு என்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழியின் வெற்றி செல்லாதது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வேட்பாளர் படிவத்தில் உண்மையான தகவல்களை கூறாமல் பொய்யான […]

#BJP 2 Min Read
Default Image

ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை-சபாநாயகர் ரமேஷ் குமார்

கர்நாடக அரசியலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள்    ராஜினாமா கடிதம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மீதமுள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இந்த நிலையில் கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி […]

#Congress 2 Min Read
Default Image

உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் அன்பழகன் தகவல் !

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 48.9 சதவீதம் என்ற அளவில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தை உயர்கல்வி அதிகம் படித்த மாணவர்கள் எண்ணிக்கையில் […]

anbalakan 3 Min Read
Default Image