தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சி அமைத்ததிலிருந்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.அந்த வகையில்,அண்மையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை,”புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு.அதைப் போல பிரதமர் மோடியை பார்த்து தானும் குட்டி மோடி ஆக […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று,புதிய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில்,அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக வருகின்ற ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை செல்கிறார்.அப்போது, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த ஜூலை 2 […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில்,அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும்,கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும், பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும்,குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் […]
நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறது. அதன்படி,டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொள்கிறார். குறிப்பாக,இந்த கூட்டத்தில் உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தானாக சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தங்கும் விடுதிகள்,உணவகங்கள் சேவைக் கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகங்களும் தானாக வாடிக்கையாளரின் பில்லில் சேவைக் கட்டணத்தை சேர்க்க கூடாது. வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் […]
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பழம்பெரும் சுதந்திரத்தின் 30 அடி வெண்கலச் சிலையை அவர் திறந்து வைத்தார். ஆந்திராவில் விஜயவாடாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதை அடுத்து 4 காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய […]
திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் பேட்டி. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் […]
பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத […]
12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படங்களையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 15-6-2022 அன்று 61 நாட்கள் மீன்பிடி […]
பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஆந்திர அமைச்சர் ரோஜா. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில், சுதந்திர போராட்ட தியாகி அல்லுரி சீதாராம ராஜு சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதற்கு முன்னதாக ஆந்திரா சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா அவர்கள் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் திடீரென்று பிரதமர் அந்த இடத்தை […]
அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு.உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன் என ஈபிஎஸ் ட்வீட். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவதாக தேமுதிக கண்டனம். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக தேமுதிக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய […]
வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”இந்திய சுதந்திரத்தின் ‘அமிர்த மஹோத்சவ்’ விழாவைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்களது வீட்டில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.மேலும்,மாநிலத்தில் உள்ள […]
அதிமுகவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,அந்த உத்தரவை மீறி பொதுக்குழு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் வழக்கு […]
கைது நடவடிக்கைகளுக்கு அதிமுக அஞ்சாது என கே.பி முனுசாமி பேட்டி. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி, கைது நடவடிக்கைகளுக்கு அதிமுக அஞ்சாது என தெரிவித்துள்ளார். மேலும், அவதூறு கருத்துக்களை கூறினால் தினகரன் நீதிமன்றத்தில் நிற்க நேரிடும். தினகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடங்கப்படும். தனது இருப்பை காட்டவே சசிகலா பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது […]
இமாச்சல பிரதேசம் பேருந்து விபத்த்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல். இமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில், நியோலி-ஷன்ஷேர் சாலையின் சைனஜ் பள்ளத்தாக்கில், தனியார் பேருந்து ஒன்று, பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால்,ஓ23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி […]
சென்னை,நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும்,முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.ரூ.22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில்,தொழில்துறையை தங்கமாக மாற்றிய அமைச்சர் ‘தங்கம் தென்னரசு’ என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார்.இது […]
மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே அம்மாநில புதிய முதல்வராக பதவியேற்றார்.இந்த வேளையில்,மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.சட்டமன்றத்தின் பலம் 288 ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 145 வாக்குகள் தேவைப்பட்டது.அதன்படி,நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசுக்கு 164 […]