திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது என்பதை காட்ட தினமும் போட்டியிடுகின்றனர் என அண்ணாமலைட்வீட். சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா […]
தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது என உபி அமைச்சர் ஜிதின் பிரசாதா ட்வீட். சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்றின் […]
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார். பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க […]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக் இருந்த நிலையில்,நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது. இதனை திருப்பி செலுத்தாத நிலையில்,நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இந்நிலையில்,2010 ஆண்டு […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் […]
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை சசிகலா மேற்கொண்டு வரும் நிலையில்,அவரை மீண்டும் அதிமுக சேர்த்துக் கொள்வதற்கு அதிமுகவினர் சிலர் ஆதரவாகவும்,சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே,”எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது;அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது.அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்,ஆனால்,அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது”,என்று சசிகலா தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சசிகலா அவர்கள் பாஜகவில் இணைந்தால் நிச்சயம் வரவேற்போம் என்று பாஜகவைச் சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில்,சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மாதம் ஒன்றுக்கு 31% வீதம் உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.டிஏ உயர்வு என்பது மாநில அரசு ஊழியர்களின் மொத்த சம்பள உயர்வையும் குறிக்கும். உத்தரகாண்ட் அரசு தனது அறிவிப்பில், “ஏழாவது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அனுமதிக்கப்படும் மாநில அரசின் அரசு ஊழியர்களுக்கு, 2021 ஜூலை 1 முதல், மாதத்திற்கு 31% அகவிலைப்படி […]
இனி காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று பீகார் மாநிலம் வைஷாலியில் உள்ள மறைந்த ஆர்ஜேடி தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் இல்லத்தில் இருந்து ஜன் சூரஜ் யாத்திரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவர்களுடன் இருந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் 2017 உ.பி. காங்கிரஸ் கட்சி.”எனது சாதனையை காங்கிரஸ் கெடுத்து விட்டது, அதனால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற […]
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசும் குறைக்க வேண்டும் எனவும்,இதனை 72 மணி நேரத்திற்குள் அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடப்படும்,போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று பேரணி நடத்தப்பட்டது.அதன்படி,பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை […]
தமிழில் காக்க காக்க திரைப்படத்தில் (உயிரின் உயிரே),கில்லியில் (அப்படி போடு),அந்நியன் (அண்டங்காக்கா கொண்டக்காரி),7G ரெயின்போ காலனி(நினைத்து நினைத்து) உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார்.அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார் . அதன் பின்பு,இரவு 10:30 மணியளவில் […]
நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார்.அதனடிப்படையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது. இதனிடையே,”திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என்றும்,எனவே,திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.இதனை 72 மணி நேரத்திற்குள் […]
தமிழகத்தில் அரசு பத்திரப்பதிவு செய்வதற்கு அவசர முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்ய விரும்புபவர்கள் குறுகிய கால அவகாசத்தில் ஆவணத்தை பதிவு செய்ய விரும்புவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அதிக பத்திரப்பதிவு நடைபெறும் முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை தொடர்பான […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,குரங்கு அம்மை பாதிப்புகள் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க […]
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. “மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் திட்டங்கள் குறிப்பாக மூலதனச் செலவுகள் நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மத்திய அரசு மே 31 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் சுமார் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், முழுத் தொகையையும் மத்திய அரசு […]
மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரத் தயாராகி வருகிறது என்றார். பரோண்டாவில் உள்ள ஐசிஏஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்டில் ‘கரீப் கல்யாண் சம்மேளனில்’ கலந்து கொள்வதற்காக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ராய்ப்பூரில் இருந்தார். மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது விரைவில் கொண்டு வரப்படும், […]
உக்ரைன் 600 க்கும் மேற்பட்ட ரஷ்ய போர்க்குற்ற சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அவர்களில் 80 பேர் மீது வழக்குத் தொடரத் தொடங்கியுள்ளதாக கிய்வின் உயர்மட்ட வழக்கறிஞர் செவ்வாயன்று தெரிவித்தார். சந்தேக நபர்களின் பட்டியலில் “ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சார முகவர்கள்” உள்ளடங்குகின்றனர் என்று, வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா ஹேக்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். எஸ்தோனியா, லாட்வியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை உக்ரைனில் உள்ள சர்வதேச விசாரணைக் குழுவில் சேர முடிவு […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி தி இன்டிபென்டன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பாக,69 வயதான புடின் பார்வையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:”வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை […]