பாத்திமா தற்கொலையில் யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்று கனிமொழி எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி பேசுகையில், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக இதுவரை யாருடைய பெயரும் […]
தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் கூடியது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளின் கொள்கை முடிவுகளை பற்றியும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிவிவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதை பற்றியும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
ரஜினி கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் தவறில்லை. ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தின்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.காலம் தாழ்த்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி காற்றுமாசு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் என 29 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களில் கிழக்கு டெல்லியின் பா.ஜ.க எம்.பி.யும் , முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரும் ஒருவர். கூட்டத்தில் கம்பீர் கலந்து கொள்ளாமல் இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தார்.இந்த செயலால் கவுதம் கம்பீரை […]
சர்வ வல்லமை பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர, சர்வ வல்லமை பெற்றவர்களாக இல்லை. அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகரான வெற்றிடம் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை எந்த கட்சியிடமும் பேசவில்லை. எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அதிர்ஷ்டம், அற்புதத்தை நம்பாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமாரும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினி வேண்டுமானால் அதிர்ஷ்டம், அற்புதத்தை நம்பலாம், ஆனால் நாங்கள் நம்புவதில்லை. அதிமுகவை விமர்சித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள்.எத்தனை பேர் […]
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை. மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதித்தோம்.170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனா கூறியிருப்பது பற்றி தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது. மேலும் ரஜினி,கமல் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில் ,சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நாகை மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலான் இயக்குனராக இருந்த ஆனந்த் ராவ் விஸ்ணு பாட்டீல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வாகியுள்ளார். இவரின் வெற்றிக்கு எதிராக சந்தன குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தேர்தல் மனுவை ரத்து செய்ய கோரி கனிமொழியும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கனிமொழிக்கு எதிரான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் நாளைக்கு உத்தரவு பிறப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்தது.சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. அதாவது மு.க.ஸ்டாலின் கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேறச் சொன்னதாக பரவியது. மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது அது வதந்தி என தொல்.திருமாவளவன் கூறினார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தொல்.திருமாவளவன் சந்தித்து அரைமணி நேரம் பேசினார். […]
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா மதுரை சிறைத்துறையிடம் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தார்.ஆனால் இவரது கோரிக்கையை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது.ரவிசந்திரன் விடுப்பில் தங்க உள்ளதாக கூறிய இடத்தில் பாதுகாப்பு […]
அடுத்த மாதம் (டிசம்பர்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை அடுத்து அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், உலக அமைதிக்கு வேண்டியும் , ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராவ் தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள தட்சணாகாசி பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய ரஜினி சகோதரர், ‘உலக அமைதிக்காகவும்,அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் […]
அதிமுக ஆட்சியை விரட்டும் வரை திமுக போராட்டங்கள் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழ்நாட்டில் மாநிலத்தின் உரிமையை பறிக்கும் அதிமுக ஆட்சியை விரட்டும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,திமுகவில் உள்ளவர்கள் யாரும் குடும்ப அரசியல் செய்ய வில்லை.ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக திமுகவிற்காக உழைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் அரசியல் காட்சிகள் தங்களது பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக சார்பில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் […]
இலங்கையின் 8 வது பிரதமர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றது வருத்தமளிக்கிறது எனவும், இதனால் இந்த நாள் தமிழனத்துக்கு துயரமான நாள் எனவும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். இலங்கை பிரதமர் தேர்தலில் ராஜபக்சே அண்ணனாகிய கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றதை அடுத்து, மதிமுக பொது செயலாளர் வைகோ அவரது கருத்தை கூறியுள்ளார். அதாவது, இந்த நாள் தமிழினத்துக்கு துன்பமான நாளாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார். இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, 90 ஆயிரம் […]
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது.அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ’தலைமைக்கழக அறிவிப்பு’ தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காமல், தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து, 21-11-2019 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.#dmk pic.twitter.com/fTABOxQKgJ — DMK (@arivalayam) […]
தொடங்கிய முதல் நாளே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை நடைபெற்றது.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலும், மாநிலங்களவை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது. இரு அவைகளிலும் மறைந்த முன்னாள் அமைச்சர்கள் அருண் ஜெட்லீ,சுஸ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.தொடந்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.சிவசேனா கட்சி . மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கான நிவாரணம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.தொடர்ந்து மாநிலங்களவையில் […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த 5 ஆம் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகமும், அவரை எதிர்த்து திமுக சார்பில் காதிர் ஆனந்தும் போட்டியிட்டனர். முதலில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்ததால் அதிமுக தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர். அதன் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிக்க உள்ளனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் ,உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனைகள், தொழில் துறையில் ஒப்பந்தமாக உள்ள புதிய கொள்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளனர். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்ய கோரிய […]