இலங்கையில் 8 வது அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இலங்கையில் நேற்று முன்தினம் தொடக்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சுஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அதிக வாக்குகள் பெற்ற கோத்தபாய ராஜபக்சே தான் வெற்றி பெற்றதாக அவராகவே அறிவித்திருந்தார். ஆனால், வெற்றிபெற்றவரை மாலை அறிவிப்போம் என ஆணையர் கூறியிருந்தார். இதற்கிடையில், மக்களின் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியருக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்றும் இடம் கொடுக்குமாறும் தீர்ப்பு வந்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லாது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று ஆலோசித்து வந்தனர். முஸ்லீம் அமைப்பான பாபர் நடவடிக்கை குழு, சன்னி வகுப்பு வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா […]
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே சிபிஐ வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.எனவே அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் […]
கனிமொழி மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுகவின் கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.ஆனால் இந்த வழக்கை நிராகரிக்கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அப்போது தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்என்று வழக்கு தொடர்ந்த சந்தானகுமார் மற்றும் கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் […]
கடந்த மாதம் தீபாவளி திருநாளுக்கு முன்தினம் நடுகாட்டுபடியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பின்பும் அந்த குழந்தை மீட்கப்படவில்லை. அதன் பின்பு, குழந்தையின் உடலை பின்பு நடுகட்டுப்பட்டி பதிமாபுத்தூர் கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும், கடந்த சனிக்கிழமை அன்று சென்னை ஐஐடியில் எம்.ஏ பயின்று வந்த பாத்திமா லத்தீப் எனும் இளம் பெண்மணி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் அந்த பெண்ணின் சாதியை சுட்டிக்காட்டியதால் […]
டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் 15-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 29 எம்.பி-களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் 4 எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனையடுத்து, டெல்லியில் ஏற்பட்டுள்ள […]
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் நாசீருக்கும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சுமூகமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியான […]
கமல்ஹாசன் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகாலம் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என திரை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்து தனது பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்தார். அதில், ‘ கமல்ஹாசன் எனது கலையுலக அண்ணா. நான் நடத்துனராக இருந்து நடிகனாக கஷ்டத்தை விட கமல் அதிகம் கஷ்டப்பட்டார். திரையுலகில், உதவி இயக்குனர், […]
கடந்த 8 ஆம் தேதி 10 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அமெரிக்க பயணம் சென்றிருந்தார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கான நிதி குறித்த உலக வங்கிகளிடம் ஆலோசனையையும் மேற்கொண்டதாக சொல்லப்பட்டது. நவம்பர் 9-ம் தேதி மாலை சிகாகோ தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு, 10-ம் தேதி அமெரிக்கன் மல்டி எத்னிக் கொலிஷன் சார்பில் நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி […]
தற்போது இந்திய பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்கிறது. இதனையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அவ்வப்போது சில இந்திய பொருளாதாரம் குறித்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை போக்குவதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், தற்போது நஷ்டத்திலிருக்கும், ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பெற்றோலியம் நிறுவனம் ஆகிய இரண்டையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்க […]
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) கூடுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.மேலும் டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இலங்கை அதிபர் தேர்தல் முடிவு பெரும் கவலைக்குரியதாக உள்ளது .முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளது பெரும் கவலை அளிக்கிறது.இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் […]
குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன். தெலங்கானா ராஜ்பவனை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன்.மக்கள் தான் எல்லாம். எப்போதும் கர்வம் தலைக்கேறாமல் இருப்பேன்.மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை .மருத்துவர் என்ற கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டு தான் பாஜக […]
தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் உரிமை நிலைநாட்டப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கையில், தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும். காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார். திமுக ஆட்சி காலத்தில் காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை […]
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது.அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார். இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து புகழேந்தி கூறுகையில்,வெளிநாடு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுராதா பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லுர் பகுதியை சேர்ந்த அனுராதா என்ற பெண் தான் வேலை செய்யும் சின்னியம்பாளையத்திற்கு செல்லும் வழியில் கோல்டுவின்ஸ் சாலையில் செல்லும்போது அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பம் விழுந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி காலில் பலத்த அடிபட்டது. இதனை அடுத்து அந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுராதா பெற்றோரை நேரில் […]
அதிதி சிங் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பிரியகாந்திக்கு நெருக்கமான அதிதி சிங் பல சர்சைகள் மூலம் பிரபலம் ஆனார். கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு நடத்திய சட்டப்பேரவை கூட்டத்தில் அதிதி சிங் கலந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் அதிதி சிங்-க்கும் பஞ்சாப் எம்எல்ஏ அங்கத் சைனிக்கிற்கும் வருகின்ற 21-ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற […]
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று […]
இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. Congratulations @GotabayaR on your victory in the Presidential elections. I look forward to working closely with you for deepening the close and fraternal […]
அதிமுகவினரின் சட்டையை தொட்டா, திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என்றுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் . மேலும் அதிமுகவினரின் வீட்டின் கதவை திமுகவினர் தட்டினால், திமுகவினர்களின் வீடுகளில் உள்ள கதவை உடைக்க வேண்டும் என்று பேசினார்.ஜெயிப்பதற்கு என்னென்ன சித்து வேலைகள் இருக்கோ அத்தனையும் செய்வேன் என்று தெரிவித்தார்.