வெற்றியை அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது.ஆனால் கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை […]
எந்த மாநிலத்தில் பிரச்னை நடந்தாலும் குரல் கொடுப்பது திமுக தான் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் திமுக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான். இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வந்தால் அதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என்று பேசினார்.
வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 19 -ஆம் தேதி )காலை 11 மணிக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது .இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கோத்தபய ராஜபக்ச 50 % […]
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.வாக்கு […]
திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆடத்தெரியாதவன் அரங்கு பத்தவில்லை என்ற கதையாக தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும். தமிழக அரசு தென்பெண்ணை ஆறு விவகாரத்தில்அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியில் திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான். ஐஐடி மாணவி தற்கொலை பிடித்து அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .நிச்சயமாக குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் […]
உச்சநீதிமன்றம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே காவிரி அணை கட்ட அனுமதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் தோற்றிருப்பது கண்டனத்திற்குரியது. நதிநீர் உரிமையை நிலைநாட்டி, 5 மாவட்ட மக்களை பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து முதல்வர் மேல்முறையீடு செய்ய வேண்டும்.’ என கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் . தமிழகத்தில் அதிமுக ஆட்சி,மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை.உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை .தமிழக […]
உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீர்மேலான்மை விசயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது . கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு தீர்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே […]
விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில். தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெரிவித்தார். மேலும் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு படித்தால் நன்மை இல்லை. அன்றன்றே பாடங்களை படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் தற்போது புதிய மாநில செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி இருவருக்கும் இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. கர்நாடக […]
நவம்பர் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஆஜராகவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது எனபாஜகவை சேர்ந்த சீனிவாசன் தேசிய தாழ்த்தபட்டோர் […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தது. இதனையொட்டி குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.இந்த நிலையில் தற்போது சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் […]
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெறாமல் உள்ளது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் அமமுக சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அதாவது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் நவம்பர் 22ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார் தினகரன் என்று […]
இந்திய பொருளாதாரமானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு காலாண்டில் 5 சதவீதம் குறைந்தது.இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த 11 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி குறிப்பிடுகையில், ‘ விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை சரிவடையும். […]
இலங்கை அதிபர் தேர்தலில் காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இலங்கை அதிபர் தேர்தலில் காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும், மனுநீதி முகாம்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் இவருக்கு பலரும் சால்வை போர்த்தி உள்ளனர். இவருக்கு அதிக அளவிலான சால்வை மற்றும் துண்டுகளை அணிவிப்பதால், ஒவொரு இடங்களிலும், 10 முதல் 15 நிமிடங்கள் வரை மக்களிடம் மனுக்களை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தனக்கு சால்வை அணிவிக்க வந்தவர்களை […]
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி மற்றும் மைத்துனர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி உள்ளாட்சி தேர்தலில் அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மைத்துனர் […]
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்கள்,தேசியவாத காங்கிரஸ் 54 இடங்கள்,காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் […]
தலைமை முடிவு செய்தால் தான் மேயருக்கு போட்டியிட முடியும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்து வருகிறது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும் விருப்பமனுக்களை விநியோகம் செய்து வருகின்றது. சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில் இது குறித்து திமுக […]