டெல்லி : இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து RTI ல் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேர தரவுகள் (IMD-AWS Reports) இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும் பொதுமக்கள் பயன்ப்படுத்த முடியாது என இந்திய வானிலை மையம் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளது. இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, […]
கர்நாடகா : பெங்களூருவில் நேற்றைய தினம் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டி.என்.ஏ நெட்வொர்க் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. எம். சின்னசாமி மைதானத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு முன்னதாக இரண்டு நுழைவு வாயில்கள் வழியாக ஏராளமான ரசிகர்கள் திரண்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 […]
டெல்லி : இன்று, உலக சுற்றுச்சூழல் தினம். பருவநிலை மாறுபாடு, வெப்பநிலை உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். கடந்த மே 25-26 தேதிகளில் குஜராத்திற்கு பயணம் செய்தபோது, கட்ச்சில் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழுவால் இந்த செடி […]
கர்நாடகா : பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக நீதிமன்ற நீதிபதி சார்பில், ”இவ்வளவு கூட்டம் வரும் போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா?காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் […]
பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற முன்னெடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ”பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வருத்தம் அடையச் செய்கிறது. […]
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். முன்னதாக, இந்த துயரச் சம்பவத்துக்காக, உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு துயர […]
பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், எம். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்.சி.பி. பாராட்டு விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து பெங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் […]
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் வெற்றி கொண்டாட்டம் இன்று (04.06.2025) பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க ஏராளமான ரசிகர்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிழந்தனர். இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு குறித்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் […]
பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், தங்கள் அணி கோப்பை வென்றதை கொண்டாடி தீர்க்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர். எங்கும் பார்த்தாலும் சிவப்பு ஜெர்ஸியும், ஆர்சிபி வாழ்த்து கோஷங்களும் முழங்குகின்றன. இந்நிலையில் தான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் கொண்டாட்ட விழா பாதியில் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்சிபி […]
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இன்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), ஆர்சிபி அணிக்காக மைதானத்திற்குள் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இறுதியில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் பெரும் துயரமாக மாறிவிட்டது. இதனை காண ஆர்சிபி ரசிகர்கள் எம். சின்னசாமி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் திரண்டதால் கூட்ட நெரிசல் […]
பெங்களூரு : 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025 சீசனும் 18 எனும் போது இப்போது முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிராபி வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கோப்பை வென்று பெங்களூர் திரும்பியுள்ள ஆர்சிபி அணியை பாராட்டும் வகையில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, வெற்றிக் கோப்பையுடன் பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களுக்கு சாலையெங்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக […]
பெங்களூரு : ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விராட் கோலியின் 18 ஆண்டுகால கனவு நனவானது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் இருந்து பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களுக்கு ரசிகர்கள் குதூகலத்துடன் வரவேற்பு அளித்தனர். ஈ சாலா கப் நம்தே என்பது இந்த ஆண்டு நிஜமாகிவிட்டது எனக் கூறி அவர்கள் பூரிப்படைந்தனர். அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்தடைந்த ஐபிஎல் சாம்பியன்ஸ் ஆர்சிபி அணியை விமான […]
டெல்லி : நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறுகிறது, அதேசமயம் ஜூலை மாதத்தில் தொடங்குவது மழைக்கால கூட்டத்தொடராகும். தற்போதைய தகவல்களின்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை […]
கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே மூன்று மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய சிறுவன் ஷங்குவின் வீடியோ தான். வைரலாக பரவிய அந்த வீடியோவில், ஷங்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தான். இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்று, கேரள அரசின் […]
கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், அவரின் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் நேற்றைய தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ”கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார […]
கர்நாடகா : சென்னையில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ”கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதைத் தொடர்ந்து, அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கியது. இவரது இந்த சர்ச்சை கருத்து கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளால் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக, முதலமைச்சர் சித்தராமையாவும் கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இதையடுத்து, கடந்த வார வெள்ளிக்கிழமை, கர்நாடக […]
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் படுகொலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இந்த வாரம் நடைபெறும் முதல் கூட்டமாகும். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று […]
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில் தேர்வை நடத்துவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே கட்டமாக ஆன்லைனில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவை என்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு, தேர்வில் பங்கேற்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான தேர்வு மையங்கள் அடையாளம் […]
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங் பகுதிகளில் சுமார் 1500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்இந்தச் சூழலில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, லாச்சன் நதி அருகே மீட்புப் பணிக்காக ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். அப்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 6 பேர் மாயமாகியுள்ளனர். […]