ஒரே நேரத்தில் களத்தில் 3 வீரர்கள்..! குழம்பிய ரசிகர்கள்..! கோலி விளக்கம்..!

Default Image

இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடைசி மற்றும் 3 வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தவான் அவுட் ஆன பின்னர் 4-ம் இடத்தில் இறங்குவதற்கு  ஸ்ரேயாஸ் ஐயர்  மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினர். களத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருந்ததால்  சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

பிறகு ரிஷாப் பண்ட் களமிறங்கினார். பிறகு  ரிஷாப் பண்ட் 19 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர்  5 ரன்னிலும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.இது குறித்து கோலி கூறுகையில் , களத்தில் ஒரே நேரத்தில் இருவரும் இறங்க முக்கிய காரணம் சரியான தகவல் தொடர்பு இல்லாததது என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் , 10 ஓவர்களுக்கு மேல் விக்கெட்  தாக்கு பிடித்தால் 4-வது  இடத்தில் ரிஷப் பண்ட் இறக்கவும் , அதற்கு முன் விக்கெட்டை இழந்தால்  ஸ்ரேயாஸ் 4-வது  இடத்தில் இறக்கவும் திட்டமிட்டோம். ஆனால் விக்கெட் தொடர்ந்து விழுந்ததால் என்ன செய்வது என தெரியாமல்  ஒரே நேரத்தில் இருவரும் களம் இறங்கினர் என கோலி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW