Indianhockey
19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி 13 வது நாளாக நடைபெற்று வரும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பல பதக்கங்களை வென்று நாட்டைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று ஆடவர்களுக்கான ஹாக்கி இறுதிப்போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் முதல் காலிறுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது காலிறுதியில் மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து இந்திய அணியை முன்னிலைப் பெறச்செய்தார். பிறகு, மூன்றாவது காலிறுதியில் பெனால்டி கார்னர்களில் ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ் மற்றும் அபிஷேக் ஆகியோர் கோல் அடித்தனர்.
இதனால் இந்தியா மூன்று காலிறுதியில் முன்னிலை பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி பிரிவில் நடப்பு சாம்பியனான ஜப்பானைத் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. இதற்கிடையில், இந்தியா 1966, 1998 மற்றும் 2014 ஆகிய மூன்று பட்டங்களை வென்றுள்ளது. இதை தொடர்ந்து ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு எதிரான பிரிட்ஜ் இறுதிப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 94வது பதக்கம் ஆகும். இன்னும் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருவதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது. தற்போது வரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என 95 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…