இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
அதில் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் உள்ளிட்ட 7 வீரர்கள் இடம்பெறவில்லை.தற்போது ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இந்திய உடனான ஒருநாள் தொடரில் விளையாட முதன்முறையாக இடம் கிடைத்துள்ளது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் மார்னஸ் 143 , 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியஅணி வீரர்கள்:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ) ,சீன் அபோட் ,ஆஷ்டன் அகர் ,அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்) ,பாட் கம்மின்ஸ் ,பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ,ஜோஷ் ஹேசில்வுட் ,மார்னஸ் லாபுசாக்னே ,கேன் ரிச்சர்ட்சன் , ஸ்டீவன் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க் ,ஆஷ்டன் டர்னர் ,டேவிட் வார்னர் ,ஆடம் சம்பா ஆகியோர் இடம் பெற்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…