ஐபிஎல்லில் இத்தனை கோடிக்கு ஏலமெடுத்தது வீண்போகவில்லை.! சதம் அடித்து அசத்திய பானிபூரி இளைஞர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் யாஷஸ்வி ஜைஸ்வால் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார்.
  • ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடப்படுகிறது.

ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால், தற்போது யு19 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் என குறிப்பிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் யாசஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார். இடத்தொடர் முழுவதும் யாஷஸ்வி சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது முயற்சிக்கு தக்கபலன் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, இவர் சிறுவயதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மும்பைக்கு வந்தபின், வசிக்க வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். புகழ் பெற்ற சச்சின் டெண்டுல்கர் போல் ஆக வேண்டும், என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டார். ஆனால் இருவருடன் இருந்ததோ வறுமை மட்டும்தான். அப்போது இடைவிடா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட இவர் மைதானத்தில் உள்ள முகாமில் தங்கியிருந்தார். பின்னர் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட இவர், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில், விடாமுயற்சியும் அயராத உழைப்பும், மேற்கொண்ட ஜெய்ஸ்வால் விஜய் ஹசாரே தொடரில் விளையாட மும்பை அணியில் இடம் பிடித்தார். பின்னர் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி மிரளவைத்தார். இதன்மூலம் முதல்தர போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் தற்போது நடந்து வரும் U19 உலககோப்பை இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்தது. இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல்-2020க்கான ஏலத்தில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ரூ.2 கோடியே 40 லட்சதுக்கு ஏலமெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

5 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

5 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

8 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

8 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

9 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

10 hours ago