தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியனான அயர்டன் சென்னாவின் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை செலுத்தினார்.

Ayrton Senna - Ajith Kumar

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே வைத்துள்ளார். தற்பொழுது, கார் பந்தயத்தில் பங்கேற்க பிரேசில் சென்ற நிலையில்,  இமோலா நகரில் உள்ள பிரேசில் வீரர் அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஜித் குமார் மரியாதை செலுத்தினார்.

அயர்டன் சென்னாவின் சிலையை முத்தமிட்டும், முழங்காலிட்டும் வணங்கினார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் தன்னை நேசிப்பவர்களுக்கும், தான் நேசிப்பவருக்கும் அஜித் குமார் உண்மையானவர் என கூறி வருகின்றனர்.

இமோலா சர்க்யூட் ரேஸிங் ட்ராக்கில், 1994-ம் ஆண்டு மே 1-ம் தேதி நடைபெற்ற சான் மரினோ கிராண்ட் பிரி போட்டியின்போது, சென்னா ஒரு துயரமான விபத்தில் உயிரிழந்தார். மூன்று முறை பார்முலா 1 உலக சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு அப்போது வயது வெறும் 34தான். இவரை தனது ரோல் மாடல் என பல இடங்களில் கூறியிருக்கிறார் அஜித்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்