இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் இருவரும் களமிறங்கினர்.
ஆனால், கடந்த போட்டியில் 98 ரன்கள் விளாசிய தவான் இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்திலே 4 ரன்னில் வெளியேறினார். பின்னர், கேப்டன் கோலி களமிறங்கினார். அடித்து விளையாட தொடங்கிய ரோஹித் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் இறங்கிய கே .எல் ராகுல், கேப்டன் கோலி உடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இவர்கள் கூட்டணியில் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர்.
கோலி கடந்த போட்டி போல இந்தப்போட்டியிலும் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, கோலி 66 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷாப் பண்ட் கே .எல் ராகுலுடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் கூட்டணியிலும் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர். அதிரடியாக விளையாடி வந்த கே .எல் ராகுல் சதம் விளாசி 108 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்த சில நிமிடங்களில் ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்து 77 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், ஹர்திக் பாண்டியா 35, க்ருனால் பாண்டியா 12* களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணியில் சாம் கரண், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும், டாம் கரண், ரீஸ் டோப்லி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…