18 வயசு ஆச்சா? வாக்காளராக மாறுங்க…RCB-க்கு வாழ்த்து தெரிவித்து விழிப்புணர்வு சொன்ன ECI!
18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

பெங்களுர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையை வேற்று வாழ்த்துக்கள் மழையை தற்போது பெற்றுக்கொண்டு வருகிறது .
இந்த வெற்றி, அணியின் நீண்டகால ரசிகர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் விடாந சவுதாவிலிருந்து எம். சின்னசாமி ஸ்டேடியம் வரை வெற்றி பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, ரசிகர்கள் பலரும் கையில் பட்டாசுகளுடன் வருகை தந்து நடனம் ஆடி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். மற்றொரு பக்கம் பெங்களூருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அரசியல் தலைவர்களில் இருந்து சினிமா பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான சூழலில், இந்த மகத்தான வெற்றியை பயன்படுத்தி, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு சமூக விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. “18 ஆண்டுகள் காத்திருந்தது போதும், இப்போது RCB சாம்பியனாகிவிட்டது! 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளராக பதிவு செய்யுங்கள், வாக்களித்து சாம்பியனாகுங்கள்!” என்று ECI தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
RCB-யின் வெற்றியும், ECI-யின் இந்த கோரிக்கையும் இணைந்து இளைஞர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் உணர்வையும், ஜனநாயக பொறுப்பையும் இணைக்கும் இந்த முயற்சி, புதிய வாக்காளர்களை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் அமைந்துள்ளது.
🏏 The 18-year wait is finally over — Congratulations RCB New Champion! #IPL 🏆
Turning 18? It’s your time to shine!
Register as Elector & Be ready to vote like a champion 🏆Credit: @RCBTweets#RCBvPBKS #IPLFinal pic.twitter.com/XjwH0cG5G5
— Election Commission of India (@ECISVEEP) June 3, 2025
வாக்காளர் பதிவு செய்யும் முறை?
வாக்காளர் பதிவு செய்வது எளிதான மற்றும் முக்கியமான செயல்முறையாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ இணையதளம் அல்லது Voter Helpline App மூலம் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்யலாம். மேலும், தவறான பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்தவும் இந்த தளம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.